சென்னை, முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 82-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது. இந்தியாவின் இளம் பிரதமராக பொறுப்பேற்று, இளமையின் கனவுகளோடும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையோடும் இந்தியாவை நவீனப் பாதையில் வழிநடத்தியவர் தலைவர் ராஜீவ் காந்தி. நவீன இந்தியா, பொருளாதார வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம், தொலைத்தொடர்பு புரட்சி என இன்று நாம் காணும் பல மாற்றங்களுக்கான அடித்தளத்தை அவர் தனது தொலைநோக்குப் பார்வையால் உருவாக்கினார். வாக்களிக்கும் வயது 18 அதேபோல், இளைஞர்களை ஜனநாயகத்தின் மையத்திற்கு கொண்டு வருவதற்காக வாக்களிக்கும் வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைத்தார். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டிற்கான முயற்சிகள் மூலம், கிராமப்புறப் பெண்களும் அரசியல் அதிகாரத்திலும் முடிவெடுக்கும் அமைப்புகளிலும் பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கினார். ஜனநாயகப் புரட்சி என்னைப் போன்ற கிராமப்புறப் பின்னணியில் இருந்து வரும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண் அரசியலில் அடியெடுத்து வைக்கவும், மக்களுக்காகப் பணியாற்றவும் உருவான வாய்ப்புகளின் பின்னணியில், ராஜீவ் காந்தி முன்னெடுத்த இந்த ஜனநாயகப் புரட்சிக்கும் முக்கியமான பங்கு உண்டு. டிஜிட்டல் புரட்சி இன்று இந்தியா காணும் இளைஞர் எழுச்சியும், டிஜிட்டல் புரட்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும் பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் கண்ட கனவுகளின் தொடர்ச்சியே. எதிர்கால இந்தியாவை கனவு கண்ட அந்த இளம் பிரதமரின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வைக்கும் நவீன இந்தியாவை உருவாக்கிய அவரது பங்களிப்பிற்கும் அவரது பிறந்த தினத்தில் எனது நெஞ்சார்ந்த அன்பையும், மரியாதையையு. செலுத்துகிறேன். ராஜீவ் காந்தியின் கனவு நவீனமான, சமத்துவமான, இளைஞர்களின் சக்தியால் முன்னேறும் இந்தியா என்றும் நமக்கு வழிகாட்டட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-digital-india-is-rajiv-gandhis-vision-jyothimani-praise




