துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற பிளைதுபாய் விமானத்தில், துணை விமானி விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயன்றதாக கூறப்படுகிறது. அவரை தடுக்க முயன்ற கேப்டன் ஸ்மித் மச்சார் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்தார். எனினும், காயத்தையும் பொருட்படுத்தாமல் துணை விமானியை எதிர்த்து போராடிய ஸ்மித் மச்சார், காக்பிட் கதவை திறந்தார். இதையடுத்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இணைந்து துணை விமானியை கட்டுப்படுத்தினர். தலைவர்கள் பாராட்டு பின்னர் விமானத்தில் இருந்த மற்றொரு விமானி விமானத்தை சவுதி அரேபியாவின் தபுக் நகருக்கு பாதுகாப்பாக திருப்பி தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் 170-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். தீரத்துடன் செயல்பட்ட ஸ்மித் மச்சார் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார். குஜராத்தை சேர்ந்த விமானி ஸ்மித் மச்சாருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். ஊக்கமளிக்கிறது இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று வீடியோ கால் வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார். இந்த தொலைபேசி உரையாடலின் போது, விமானத்தில் நடந்தது என்ன? துணை விமானியின் சதி முயற்சியை முறியடிக்க துணிச்சலாக செய்த நடவடிக்கைகள் பற்றி விமானி எடுத்துரைத்தார். மேலும், நீங்கள்தான் (மோடி) எனக்கு மிகப்பெரிய முன்னுதாரணம்.நீங்கள் என்னிடம் பேசியது எனக்கு ஊக்கமளிக்கிறது” என்றும் மோடியிடம் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/pm-modi-speaks-to-smit-machchhar-indian-pilot-stabbed-on-flydubai-plane




