மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ. கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார் (18) இவர் தனது நண்பருடன் மேலூரிலுள்ள தனியார் கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அலங்காநல்லூர் - மேலூர் நான்கு வழிச்சாலை பிரிவில் சென்றபோது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சஞ்சய்குமாரை அரிவாளால் சராமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். உயிருக்குப் பயந்த சஞ்சய் குமார் அவரது நண்பருடன் ரத்த வெள்ளத்தில் நடந்து சென்று குமாரம் என்ற ஊரில் பொதுமக்களிடம் காப்பாற்ற கூறி தஞ்சம் அடைந்துள்ளார். தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த கல்லூரி மாணவர் சஞ்சய்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் முலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மதுரை கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ரத்த வெள்ளத்தில் தஞ்சம் அடைந்த கல்லூரி மாணவர் உயிருக்குப் போராடிய காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு: மாமியாரைக் கொலை செய்த மருமகள் - சிக்கியது எப்படி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/madurai-college-student-hacked-with-sickle-students-took-refuge-in-village-dripping-with-blood




