சென்னை, சவுதியில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழக மீனவர் சுட்டுக்கொலை தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் விளக்கம் அளித்து பேசியதாவது; ”மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் மாவீரன், சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் மீனவர் மாவீரன் உயிரிழந்தார். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சவுதி அரேபியாவில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் மீனவர் மாவீரன் உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீனவர் மாவீரன் உடலை தமிழகம் கொண்டு வர தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/fisherman-killed-in-saudi-arabia-minister-aadav-arjuna-issues-clarification




