தென்னை சிறப்பு திட்டம் - தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம்! வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம்! கரும்பு விவசாயம். வேளாண் கண்காட்சி -! வேளாண் விருதுகள் பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்! தரிசு நிலங்கள் மீட்கப்பட்டு வேளாண் காடுகள் உருவாக்கப்படும்! ``விவசாய நிலங்களில் நிரந்தர பசுமைக்காக வேளாண் காடுகள் திட்டம் அமைக்கப்படும். 12,500 ஏக்கர் தரிசு நிலங்கள் மீட்கப்பட்டு வேளாண் காடுகள் உருவாக்கப்படும். வேளாண் காடுகள் திட்டத்தை உருவாக்க ரூபாய் 17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார் அமைச்சர் வினோத்! பருத்தி உற்பத்தியைப் பெருக்க ரூபாய் 27. 21 கோடியில் பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்! தமிழ்நாடு மண்வளப்பாதுகாப்பு இயக்கம்! மாநில அரசின் சிறப்பு திட்டம்! உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் செயல்படுத்திட மாநில நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு! உயிர்ம உர பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு 4000 ரூபாய் ஊக்கத்தொகை! ``உயிர்ம உர பயன்பாட்டுக்காக நிரந்தர மண்புழு உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்படும். உயிர்ம உர பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு நான்காயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். மண்புழுக்கள் வாழும் அளவுக்கு மண்வளத்தை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது." ஐந்து ஆண்டுகளுக்கு ரூபாய் 600 கோடியில் மண்வள பாதுகாப்பு இயக்கம் - பட்ஜெட்டில் அறிவிப்பு! `131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு' அடுத்த ஐந்து ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர் வினோத் வேளாண் பட்ஜெட் தாக்கல் என்பது தெரிவித்துள்ளார். மேலும் விவசாய தேவைகளுக்கான நீர் பாசன பரப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 100 சதவீத பயிர் காப்பீடு உறுதி செய்யப்படும் அமைச்சர் வினோத், ``பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் முழுமையான 100 சதவீத பயிர் காப்பீடு உறுதி செய்யப்படும் இத்திட்டத்திற்கு ரூபாய் 648 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார், `நீங்களும் விவசாய வீட்டு மகன்தான்' - விஜய் குறித்து அமைச்சர் விஜய் அமைச்சர் வினோத், ``மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் தான் விவசாய குடும்பத்தில் பிறக்க விரும்புவதாக தெரிவித்து இருந்தார். இன்று தமிழ்நாட்டில் விவசாயிகளாக இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு மகனாக உங்களைப் பார்ப்பதால் நீங்களும் விவசாய வீட்டு மகன்தான்" கறுப்பு சட்டை அணிந்து வந்த திமுக-வினர்! மேட்டூர் அணை திறக்கப்படாததை கண்டிக்கும் விதமாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றை வேளாண் பட்ஜெட் தாக்கல் நிகழுக்க்கு கறுப்பு சட்டை அணிந்து வந்தனர், சபாநாயகர் அட்வைஸ்! அமைச்சர் ஆர்.வினோத் தனது பட்ஜெட் உரையை தொடங்கும் போது, `கோட் சூட் போட்ட விவசாயி.' என முதல்வர் விஜய் குறித்து புகழ்ந்து பேசினார். அப்போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். உடனே சபாநாயகர், அமைச்சரிடம், பட்ஜெட்டில் என்ன இருக்கிறதோ அத மட்டும் படியுங்க என அட்வைஸ் செய்தார். 2026-27வேளாண் பட்ஜெட் தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில், வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண் மற்றும் உழவர் நலத் துறைக் ரூ.14,984 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/agriculture/tn-agriculture-budget-2026-27-live-updats




