விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்காக அ.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். Jana Nayagan - Stills - Vijay படத்தின் ரிலீஸுக்குப் பிறகு NDTV ஊடகத்திற்கு இயக்குநர் அ.வினோத் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "சினிமா என்பது ஒரு வியாபாரம். ஒரு திரைப்பட இயக்குநராக எனது தொழிலை நேர்மையாகவும், உண்மையான ஈடுபாட்டோடும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நான் ஒன்றும் பெரிய படைப்பாளி கிடையாது. பல விஷயங்களிலிருந்து நான் ஈர்க்கப்படலாம், ஆனால் நமது கற்பனைத் திறனை எந்தளவுக்கு வேலையில் கொண்டு வருகிறோம் என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது. H Vinoth - JanaNayagan வேறொரு படத்தை அப்படியே நகலெடுத்தால் அதில் படைப்பாற்றல் எங்கே இருக்கிறது? அதில் நாம் புதிதாக என்ன சேர்த்திருக்கிறோம்? தங்களது சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை வைத்துப் படம் எடுக்கும் பல இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் உண்மையான படைப்பாளிகள். நான் அப்படிப்பட்டவன் அல்ல. செய்திகளில் வரும் மனிதர்களின் கதைகளை எடுத்துப் படமாக மாற்றுகிறேன்" எனப் பகிர்ந்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/h-vinoth-says-i-am-not-a-creator-jananayagan-interview




