அயோத்தியில் உள்ள ராமர் கோயில் உண்டியல் பணத்தை எண்ணும் ஊழியர்கள் அப்பணத்தைத் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. இத்திருட்டு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அவினாஷ் சுக்லாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அயோத்தி ராமர் கோவில் உண்டியல் பணத்தைத் திருடி, தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காதலிக்கு ஆடம்பரப் பரிசுகளை வாங்கியதாக போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் பணத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி தற்காலிக ஊழியர் அவினாஷ் சுக்லா, தான் திருடிய பணத்தில் சுமார் ரூ.19 லட்சத்தை தனது ஆடம்பர வாழ்க்கைக்காகச் செலவழித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவினாஷ் சுக்லா தனது காதலியின் வங்கி வழிக் கணக்கிற்கு நேரடியாக ரூ.2.5 லட்சம் பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்பியுள்ளார். சம்பத் ராய் மேலும், அவருக்கு ஒரு விலையுயர்ந்த ஐபோன் ஒன்றையும் உண்டியல் பணத்தில் வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். தனது ஒரு சகோதரனின் ஆடம்பரத் திருமணத்திற்காக ₹6 லட்சம் பணத்தை அவர் செலவிட்டுள்ளார். மற்றொரு சகோதரனுக்கு ரூ.5 முதல் 6 லட்சம் வரை நேரடி ரொக்கப் பணத்தைக் கொடுத்துள்ளார். திருடப்பட்ட பணத்தைக் கொண்டு சுமார் ₹3.5 லட்சம் மதிப்பில் ஒரு மாருதி காரை வாங்கியுள்ளார். போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, இந்தக் காரைத் தனது சகோதரர் அபிஷேக் பெயரில் அவர் பதிவு செய்திருந்தார். போலீசார் நடத்திய சோதனையில் அவினாஷ் சுக்லாவிடமிருந்து ரூ. 20.39 லட்சம் ரொக்கம், 1,121 அமெரிக்க டாலர், தங்கம், வெள்ளி நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அயோத்தி ராமர் கோவில் உண்டியல் பண முறைகேடு புகாரைத் தொடர்ந்து, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. சம்பத் ராயின் ராஜினாமாவை அடுத்து, ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பின் மூத்த நிர்வாகியும், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியுமான கிருஷ்ண மோகன் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி கோயிலில் தொடரும் சர்ச்சை: IAS அதிகாரி காணிக்கையாக வழங்கிய ரூ.5 கோடி தங்க புத்தகம் மாயம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/arrested-ayodhya-temple-employee-bought-iphone-for-his-girlfriend



