சென்னை, திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, போலீஸ் அகாடமி இயக்குநராக அருண் ஐபிஎஸ் இருந்து வரும் நிலையில், அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். கோவை மண்டல ஐஜி கண்ணனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜெம் வீரமணி விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி வருகிறது. 2024 ஆம் ஆண்டு முதல் 2026 தேர்தலுக்கு முன்பு வரை சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ்சிடம் ஜெம் வீரமணி விவகாரம் தொடர்பாக புகார் அளித்தாக ரஞ்சன் குமார் கூறியிருந்தார். இந்த சூழலில், அருண் ஐபிஎஸ் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். கோயம்பேடு காவல் உதவி ஆணையர் யாஷ்மினும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜெம் வீரமணி பாலியல் வன்முறை தொடர்பான குற்றச்சாட்டில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்த நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வீரமணி மீதான புகார் எழுந்த போது விபசார தடுப்பு பிரிவு உதவி ஆணையராக யாஷ்மீன் பதவி வகித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/arun-ips-moved-to-compulsory-waitlist-tamil-nadu-government-takes-swift-action




