நாமக்கல், திருச்செங்கோடு அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவிகள், ஒரு கல்லூரி மாணவி உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் அழைத்து வருவது வழக்கம் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் அருகே கொன்னையார் ஊராட்சி சக்கராம்பாளையம் போயர் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர்-அமுதா தம்பதி மகள்கள் பிளஸ் 1 படிக்கும் நிவேதா(17), ஏழாவது படிக்கும் தனுஸ்ரீ(13), ஆறாம் வகுப்பு படிக்கும் அபிநயா(12). எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் இவர்களை ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வரும் (சித்தப்பா ரமேஷ்பாபு மகள்) சுபிதா என்ற கலைச்செல்வி (19) தினமும் பள்ளிக்கு சென்று இருசக்கர வாகனத்தில் அழைத்து வருவது வழக்கம். சாலையை கடக்க முயன்றபோது அந்த வகையில் இன்று மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த கலைச்செல்வி இரு சக்கர வாகனத்தில் மூவரையும் அழைத்து வர பிற்பகல் 4.30 மணியளவில் பள்ளிக்கு சென்றார். அங்கிருந்து வீட்டிற்கு 4 பேரும் ராசிபுரம்–திருச்செங்கோடு சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சக்கராம்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் பிரிவு சாலையை கடக்க முயன்றனர். அப்போது ராசிபுரத்தில் இருந்து சங்ககிரி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே கலைச்செல்வி, அபிநயா உயிரிழந்தனர். நிவேதா, தனுஸ்ரீ உயிருக்கு போராடிய நிலையில் சாலையோரம் கிடந்தனர். இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து இருவரையும் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பேருந்து ஆனால், அவர்கள் இருவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் தனியார் கல்லூரி பேருந்தில் இருந்த 30–க்கும் மேற்பட்ட மாணவிகள் இதர பேருந்துகள் வாயிலாக தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததால் சக்கராம்பாளையம் கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள எலச்சிபாளையம் போலீசார் தப்பியோடிய கல்லூரி பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/4-students-killed-in-college-bus-crash




