பெங்களூரு, துலீப் டிரோபி தொடரில் தெற்கு மண்டல அணியின் கேப்டன் திலக் வர்மா ஒரு சிக்சர் கூட அடிக்காமல் சதம் விளாசி அசத்தியுள்ளார். 195 ரன்களுக்கு ஆல்-அவுட் துலீப் டிரோபி தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியில், தெற்கு - வடக்கு மண்டல அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற வடக்கு மண்டல அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி தெற்கு மண்டல பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இதன் காரணமாக முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. சிக்சர் இல்லாமல் சதம் இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தெற்கு மண்டல அணிக்கு ஒருபுறம் விக்கெட்டுகள் விழ, மறுபுறம் பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்த கேப்டன் திலக் வர்மா ஒரு சிக்சர் கூட அடிக்காமல் சதம் விளாசி அசத்தினார். அவர், 250 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 116 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 312 ரன்கள் குவித்தது. இதையடுத்து வடக்கு மண்டல அணி 2-வது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/tilak-varma-what-a-game-250-balls-9-fours-tilak-verma-scored-a-century-without-a-single-six




