சமர்கண்ட், 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் பங்கேற்றுள்ளன. நேற்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஓபன் பிரிவில் இந்திய அணி, இந்தோனேசியாவுடன் மோதியது. இதில் இந்திய வீரர் நிஹால் சரின் 37-வது காய் நகர்த்தலில் இந்தோனேசியாவின் ஆரிப் அப்துல் ஹபிசை பதம் பார்த்தார். மற்ற இந்தியர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி தங்களது ஆட்டங்களில் 'டிரா' செய்தனர். முடிவில் இந்தியா 2.5 -1.5 என்ற கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா பின்லாந்தை சாய்த்து 2-வது வெற்றியை பெற்றது. இந்திய அணியில் திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், சவிதா ஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்றனர். வைஷாலி- அனஸ்டசியா கெய்னானென் இடையிலான ஆட்டம் டிரா ஆனது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/othersports/chess-olympiad-indias-second-victory




