சென்னை, உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள் என்று சர்வதேச இளைஞர் நாளை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 12-ம் தேதி சர்வதேச இளைஞர் நாள் இளைஞர்களின் ஆற்றலைக் கொண்டாடுவது மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி "சர்வதேச இளைஞர் நாள்" கடைபிடிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபை 1999-ம் ஆண்டு ஏற்றுக் கொண்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டின் மையக்கருத்து "வெவ்வேறு சூழல், பொதுவான விருப்பம்" (Different Contexts, Common Aspirations) என்பதாகும். முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வாழ்த்து சர்வதேச இளைஞர் நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்! புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்! உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்! கனவுகள் நனவாகட்டும்! சாதனைகள் தொடரட்டும்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/wishing-our-youth-success-in-all-fields-globally-chief-minister-vijay




