சென்னை, ‘இதயம் முரளி’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகரான அதர்வா 'பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'பராசக்தி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து, ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ‘டிராகன்’ படத்தில் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் கயாடு லோஹர். தற்போது இளைஞர்களின் க்ரஸாகவே கயாடு லோஹர் மாறி உள்ளார். ‘இதயம் முரளி’ படத்தின் மூலம் மீண்டும் நடிகராக களமிறங்குகிறார் தமன். ‘பாய்ஸ்’ படத்துக்குப் பிறகு முழுமையாக இசையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் தமன். ஆனால், இதில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் நடித்துள்ளார். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் ‘பராசக்தி’, ‘இட்லி கடை’ படங்கள் வெளியாயின. அந்தப் படங்களைத் தொடர்ந்து தனது இயக்கத்தில் உருவாகும் ‘இதயம் முரளி’ படத்தினை அவரே தயாரித்துள்ளார். இந்நிலையில், ‘இதயம் முரளி’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது. Seven days before these 7️⃣ friends arrive to enjoy together!#IdhayamMurali from July 10 - TRAILER FROM TOMORROW!@Atharvaamurali … — DawnPictures (@DawnPicturesOff) July 3, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/idhayam-murali-film-trailer-will-be-released-tomorrow




