தோஹா கத்தார் நாட்டின் முன்னாள் அரசரான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி காலமானார். கத்தார் நாட்டின் முன்னாள் அரசராக இருந்தவர் ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி. இந்த நிலையில், அவர் திடீரென்று காலமானார். அவருக்கு வயது 74. அவர் மறைவுக்கான காரணம் எதுவும் அந்நாட்டின் அரசு ஊடகம் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. 18 ஆண்டுகளாக அரசராக இருந்து, சிறிய, வளைகுடா நாட்டை உலக அளவில் பல்வேறு துறைகளிலும் முன்னணி நாடாக வளம் பெற செய்த அவர், 2013-ம் ஆண்டு ஜூனில் ஆட்சியை விட்டு இறங்கினார். இந்த நிலையில் கத்தார் முன்னாள் அரசர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துக்க அனுசரிப்பு நாளன்று இந்தியா முழுவதும் வழக்கமாக தேசியக் கொடி ஏற்றப்படும் அனைத்துக் கட்டிடங்களிலும் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அன்றைய தினம் எவ்வித அதிகாரப்பூர்வ கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறாது மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/death-of-former-emir-of-qatar-one-day-mourning-observed-in-india




