டோக்கியோ, 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று (இந்திய நேரப்படி) பங்கேற்கும் முக்கியமான போட்டிகள் விவரம் வருமாறு:- வில்வித்தை: காம்பவுண்ட் தனிநபர் தொடக்க சுற்று சஹில் ஜாதவ் (இந்தியா)- புரேவ்டோர்ஜி (மங்கோலியா), கணேஷ் மணிரத்னம் (இந்தியா)-அன்டாரு ரினால்டி (இந்தோனேசியா), அதிகாலை 4,45 மணி, பெண்களுக்கான தொடக்க சுற்று ஜோதி சுரேகா வென்னம் (இந்தியா)- அடெல் ஷிசென்பினோவா (கஜகஸ்தான்), காலை 9.45 மணி. குத்துச்சண்டை: பெண்களுக்கான 75 கிலோ பிரிவின் கால்இறுதியில் லவ்லினா (இந்தியா)- சுயோன் சியோங் (தென்கொரியா), பிற்பகல் 1.30 மணி, 60 கிலோ கால்இறுதியில் பிரியா கங்ஹாஸ் (இந்தியா)- சமதோவா (தஜிகிஸ்தான்), பிற்பகல் 2.45 மணி, 90 கிலோ கால்இறுதியில் கபில் போக்காரியா (இந்தியா)- கிசாய் கிம் (தென்கொரியா), மாலை 3.45 மணி. தடகளம்: பெண்களுக்கான வட்டு எறிதல் இறுதி சுற்று: சீமா, சன்யா யாதவ், பிற்பகல் 2.35 மணி, பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம் இறுதி சுற்று: வித்யா ராம்ராஜ், அனு ராகவன், மாலை 3.53 மணி, ஆண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம்: சந்தோஷ்குமார் மாலை 4.03 மணி. ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டம்: அவினாஷ் சாப்ளே, மாலை 4.13 மணி, ஈட்டி எறிதல் இறுதி சுற்று: ரோகித் யாதவ், யாஷ்வீர் சிங், மாலை 4.45 மணி. பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட் டத்தின் இறுதி சுற்று: சீமா, பாருல் சவுத்ரி, மாலை 5.13 மணி. துப்பாக்கி சுடுதல்: பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் தகுதி சுற்று: மனு பாக்கர், இஷா சிங், ராஹி சர்னோபாத், காலை 6.10 மணி முதல். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-key-events-india-is-participating-in-today




