ஈரோடு, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி- வீரபாண்டி ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தண்டவாள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக ஈரோடு வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்- டாட்டாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-18190) நாளை (திங்கட்கிழமை), வருகிற 8, 11-ந்தேதிகளில் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். இதேபோல் ஆலப்புலா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-13352) நாளை, வருகிற 8, 11-ந்தேதிகளில் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். இந்த தகவல் சேலம் கோட்ட ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/two-express-trains-passing-through-erode-to-be-detained




