சென்னை, சென்னை ஆர். கே நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர்களை பார்ப்பதற்காக ஆர்.கே.நகரில் வசித்து வரும் வள்ளி அவரது மகள் உள்ளிட்டோர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது போலீசார் அவர்களை மிரட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. பெண்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை வீடியோ எடுத்த மற்றொரு பெண்ணின் செல்போனை போலீசார் பறித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை எடுக்க விடாமல் பெண்கள் தடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ஆர்.கே.நகர் காவல் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-alleging-police-assault-on-women-at-the-chennai-rk-nagar-police-station




