பெய்ஜிங், சீனாவில் சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான ‘ஜோங்ஸி’ என்ற உணவின், முன்னோடி இனிப்பு உணவுப் பொட்டலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வுவாங்டூன் வளாகத்தில் ஆராய்ச்சி சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சின்யாங் நகரில் புகழ்பெற்ற பண்டைய கல்லறையான வுவாங்டூன் வளாகத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. அதில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான உணவுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த விசித்திரமான தாவர இலைகளால் சுற்றப்பட்ட தானியப் பொட்டலங்கள், இன்று மில்லியன் கணக்கான மக்கள் உண்ணும் பாரம்பரிய உணவான 'ஜோங்ஸி' எனப்படும் அரிசிப் பலகாரத்தை ஒத்திருப்பது உலகளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன அறிவியல் அகாடமியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த அரிய கண்டுபிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர். அதிசயப் பொட்டலங்கள்-டிராகன் படகு திருவிழா ஜோங்ஸி என்பது சுவையான உள்ளடக்கத்தைக் கொண்ட ஒரு அரிசி உருண்டை ஆகும். இது சமைப்பதற்கு முன்பு மூங்கில் இலைகளில் சுற்றப்படுகிறது. இந்த இலைகள் அரிசிக்கு நறுமணத்தையும் சுவையையும் சேர்க்கின்றன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வுவாங்டூன் கல்லறை, சீன வரலாற்றின் புகழ்பெற்ற 'சூ' வம்ச காலத்தைச் சேர்ந்தது என்பதால் இந்த உணவும் 2,200 ஆண்டுகள் பழமையானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற 'டிராகன் படகு திருவிழாவின்' போது, இந்த ஜோங்ஸி உணவை உண்பது இன்றும் பெரும் மரபாகத் தொடர்கிறது. நிபுணர்களின் கருத்து சீன அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளர் யோங் கே இது குறித்துக் கூறும்போது, "இந்த இலை பொட்டலங்களின் வடிவமும், பயன்படுத்தப்பட்ட பொருளும் இன்றைய ஜோங்ஸி உணவோடு மிக நெருக்கமாக ஒத்துப்போகின்றன. இருப்பினும், இதுவே அதன் நேரடி பரிணாம வடிவமா என்பதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவை" எனத் தெரிவித்துள்ளார். 2,200 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இலைகளில் உணவைச் சுருட்டி பாதுகாப்பாகப் பயன்படுத்திய இந்த தொழில்நுட்பம், அக்கால உணவு கலாச்சாரத்தின் மீதான புதிய வெளிச்சத்தை உலகிற்குக் காட்டியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/discovery-of-a-2200-year-old-precursor-to-sweet-food-in-china




