சென்னை, கடலுார் துறைமுகத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் உரங்கள், நிலக்கரி ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. சுமார் 111 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடலுார் துறைமுகத்தில், சரக்கு கப்பல்கள் கரைக்கு அருகே வராமல் கடலுக்கு உள்ளேயே நிறுத்தப்பட்டு, சிறிய படகுகளில் சரக்குகள் இறக்கப்படும். பின்னர் அவை துறைமுகத்திற்கு எடுத்து வரப்படும். இது போன்ற பல்வேறு காரணங்களால், கடலூர் துறைமுக பணிகள் காலப்போக்கில் முடங்கின. இதற்கிடையே, கடலுார் துறைமுகத்தை மேம்படுத்தி, மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர, 'மஹதி கடலுார் போர்ட் அண்டு மேரிடைம்' என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு, கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, இந்த துறைமுகத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணிகள் இன்னும் முடியவில்லை. மேலும், பணிகளை முடிக்க, அந்த நிறுவனம் அவகாசம் கேட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறுகையில், “கடலுார் துறைமுகத்தில், கப்பல்களை நிறுத்துவதற்கான இரண்டு இடங்கள் தயாராக உள்ளன. கடலுார் துறைமுகம், 9 மீட்டர் ஆழம் கொண்டது என்பதால், பெரிய கண்டெய்னர் கப்பலை இயக்க முடியும். அடுத்தகட்டமாக பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணிகள் இந்த மாதத்தில் முடியும் என எதிர்பார்த்த நிலையில், இன்னும் பணிகள் நிறைவடையாததால், பணிகளை முடிக்க வரும் ஜனவரி வரை அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை -கடலுார் சரக்கு கப்பல் சேவை அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-cuddalore-cargo-ship-service-to-begin-in-january-port-officials




