புதுடெல்லி, டெல்லியில் அனுமதியின்றி போராட திரண்ட சுமார் 700 ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். காந்தி ஜெயந்தி நாளில் வாக்காளர்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும், ஏராளமான வாக்காளர்களை நீக்கியதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், இதற்காக காந்தி ஜெயந்தி நாளில், ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகளும் அறிவித்தன. 12 மெட்ரோ நிலையங்கள் மூடல் ஆனால், இந்த போராட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை என்று போலீஸ் தரப்பு தெரிவித்தது. ஜந்தர் மந்தரை சுற்றிலும் தடுப்புகள் அமைத்திருந்தனர். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் மெட்ரோ ரெயிலில் வருவதை தடுப்பதற்காக, ஜந்தர் மந்தர், ராஜீவ் சவுக், மத்திய செயலகம் உள்பட 12 மெட்ரோ ரெயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. ஜந்தர் மந்தரை சுற்றிலும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. அதையும் மீறி, ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். ஞானேஷ்குமார் பதவி விலக்கோரி முழக்கங்களை எழுப்பினர். பிரதமர் மோடி-ஞானேஷ்குமார் கூட்டணி அமைத்திருப்பதாகவும் கோஷமிட்டனர். முன்னாள் முதல்-மந்திரி அதிஷி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் சவுரவ் பரத்வாஜ், சஞ்சீவ் ஜா மற்றும் அக்கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அகில இந்திய மாணவர் சங்க தேசிய தலைவர் நேஹா போரா மற்றும் மாணவர்கள் அமைப்பினர் பலரும் கைது செய்யப்பட்டனர். ஜந்தர் மந்தருக்கு வரும் வழியில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அதிஷி, மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் நார்த் அவென்யூவில் கைது செய்யப்பட்டனர். பின்னர், சஞ்சய் சிங், நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் 700 இந்திய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஜந்தர் மந்தருக்கு செல்லும் வழியில், அசோகா சாலை ரவுண்டானாவில் நிறுத்தப்பட்டனர். அவர்களில் பலர் கைதாகினர். 700 பேர் கைது இந்திய தேசிய மாணவர் சங்க தலைவர் வினோத் ஜாக்கர், தனது அலுவலகத்தில் இருந்து ஜந்தர் மந்தருக்கு நடைபயணமாக சென்றபோது கைது செய்யப்பட்டார். பிரதமர் மோடி, ஞானேஷ்குமார் ஆகியோரின் முகமூடிகளை அணிந்தபடி, இளைஞர் காங்கிரசார் ஊர்வலமாக சென்றனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மொத்தம் 700 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/700-members-of-student-organizations-were-arrested-while-gathering-to-protest-and-demand-the-resignation-of-the-chief-election-commissioner




