சென்னை ஓர் அரசு வல்லரசாகும் முன்பு விவசாயிகளின் அரசாக மாற வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் கொள்கை என வேளாண் பட்ஜெட் தாக்கலின்போது அமைச்சர் வினோத் பேசியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மே மாதம் 10-ந்தேதி ஆட்சியமைத்த த.வெ.க. அரசு, இரண்டரை மாதங்களுக்கு பின்னர், 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று தாக்கல் செய்தது. எம்.எல்.ஏ.க்கள் வருகை இந்த நிலையில், தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதன்படி, காலை 9.30 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துறை சார்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர். வேளாண் பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் ஆசி பெற்றார். இதன்பின்னர் சபாநாயகர் பிரபாகர் அவைக்கு வருகை தந்ததும், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை தந்தனர். அவையில் திருக்குறள் வாசிக்கப்பட்டது. வேளாண் பட்ஜெட் தாக்கல் இதனை தொடர்ந்து, தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார். அவர் பேசும்போது, த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. விவசாய குடும்பங்களின் மகனாக இருப்பதால் இலவச மும்முனை மின்சாரத்தை தொடர முதல்வர் அறிவுரை வழங்கி உள்ளார். வேளாண்மையை பெருக்க பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம். விவசாயிகளின் அரசு ஓர் அரசு வல்லரசாகும் முன்பு விவசாயிகளின் அரசாக மாற வேண்டும் என்பதே முதல்வரின் கொள்கை என்று அவர் பேசியுள்ளார். தொடர்ந்து பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்து அவர் பேசி வருகிறார். அதில், தமிழக விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உயிர்ம உர பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை. மண் வளம் மண் புழுக்கள் வாழும் அளவுக்கு மண்வளத்தை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ரூ.600 கோடியில் மண்வள பாதுகாப்பு இயக்கம். மண் வளம் பாதுகாக்க ரசாயன உரம் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் ரூ.4 கோடி விதை பண்ணைகள் அமைத்து விதை மேம்பாட்டு மையம் மூலம் விற்பனை செய்ய ரூ.34.72 கோடி ஒதுக்கீடு பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டம் ரூ.648 கோடி நஞ்சில்லா உணவு உற்பத்தி, இயற்கை வேளாண் தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி என அறிவித்து தொடர்ந்து அவர் பேசி வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/before-india-becomes-a-superpower-it-must-become-a-farmers-state-first-says-chief-ministers-policy-minister-vinod




