சென்னை, சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் 51 நீதிபதிகள் உள்ளனர். 24 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என 19 பேருடைய பெயரை சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் ஏற்றுக் கொண்டது. அந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. 15 நீதிபதிகள் பதவியேற்பு இந்த பரிந்துரை பரிசீலித்த மத்திய அரசு, 15 பேரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி சென்னை ஐகோர்ட்டிற்கு 15 நீதிபதிகளை நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 15 பேரும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இதில், 5 நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதிகளாகவும், 10 பேர் கூடுதல் நீதிபதிகளாகவும் பதவியேற்றுக்கொண்டனர். தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டர்கள் பெயர் விவரம்:- கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி ரஜ்னிஷ் பதியில் ரமேஷ் நடராஜன் ஜிகே முத்துக்குமார் ராமகிருஷ்ணா ராஜேஷ் விவேகானந்தன் ரவீகுமார் சங்கரநாராயணன் திலீப் குமார் நடராஜன் எல்லப்பன் மனோகரன் முருகன்( நீதித்துறை அதிகாரி) சுமதி அல்லி திருமகள் சண்முகன் கார்கிகேயன் முருகேசன் பாலுசாமி குணசேகரன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/chennai-aikorttirku-niyamikappatta-15-neetipathigal-padhaviyerpu




