சென்னை, தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள 5,068 கி.மீ. நீளமுள்ள ரெயில் பாதைகள் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினரும் விரும்பும் ரெயில்கள் ஏழை முதல் செல்வந்தர் வரை அனைவரும் பயணிக்க விரும்புவது ரெயில்களில் தான் என்றால் மிகையாகாது. முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகள் முதல், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் வரை பல்வேறு கட்டணங்களுடன் விதவிதமான வசதிகள் கொண்ட பெட்டிகள் ஒரே ரெயிலில் அடங்கியிருப்பது அதன் சிறப்பு. அதுவும் ஒரே நேரத்தில் 1,500 பயணிகளுக்கும் அதிகமானவர்களை அழைத்து செல்லும் மிகச்சிறந்த போக்குவரத்து சாதனம் ரெயில்கள்தான். ஆரம்ப காலத்தில் நீராவி என்ஜின்களைக் கொண்டு ரெயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், தொழில்நுட்ப வளர்ச்சியில் நீராவி என்ஜின் டீசல் என்ஜினாக மாறியது. மின்சார என்ஜின்களாக உருமாற்றம் தற்போதைய அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சியில், டீசல் என்ஜின்கள் எல்லாம் மின்சார என்ஜின்களாக உருமாற்றம் பெற்றன. அதற்கு ஏற்ற வகையில், தமிழகம் உள்பட தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரெயில் பாதைகள் அனைத்தும் மின்மயமாக்கப்பட்டு வந்தன. அதாவது, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தெற்கு ரெயில்வேயில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள ரெயில் பாதைகள் முழுவதும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. 100 சதவீதம் மின்மயமாக்கல் நிறைவு அந்த வகையில், 5,068 கி.மீ. நீளமுள்ள ரெயில் பாதைகள் தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது, இந்த பாதைகள் அனைத்தும் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இது தெற்கு ரெயில்வே வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. கடைசியாக, மின்மயமாக்கல் பணி தமிழகத்தில் உள்ள பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையிலான 71 கி.மீ. தூரத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் கணேஷ், புதிதாக மின்மயமாக்கப்பட்ட பட்டுக்கோட்டை-காரைக்குடி பிரிவின் சட்டப்பூர்வ ஆய்வு பணிகளை நேற்று (செப்டம்பர் 9) வெற்றிகரமாக நடத்தி முடித்தார். டீசல் என்ஜின்களுக்கு குட்பை தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள 5,068 கி.மீ. நீள ரெயில் பாதை வழித்தடமும் மின்மயமாக்கப்பட்டுள்ளதால், இனி டீசல் என்ஜின்களுக்கு வேலையே இல்லாத நிலை உருவாகியுள்ளது. மேலும், ரெயில் என்ஜின்கள் மாற்ற வேண்டிய சூழ்நிலை இனி இல்லாததால், பயண நேரமும் குறையும், ரெயில்களின் வேகத்தையும் அதிகரிக்க முடியும். இந்தியாவில், தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரெயில் பாதைகள் மின்மயம் ஆக்கும் பணிகள் 1931-ம் ஆண்டு மே 11-ம் தேதி தொடங்கியது. அன்றைய பம்பாயில் (மும்பை) இருந்த மின்சார ரெயில் சேவை சென்னைக்கும் வந்தது. சென்னையில் 1968-ம் ஆண்டு கடற்கரை - தாம்பரம் இடையே ரெயில்பாதை மின்மயம் ஆக்கப்பட்டு, புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/goodbye-to-diesel-train-engines-100-electrification-of-5068-km-of-railway-lines




