கோவை, கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட ஓதிமலை சாலையில் உள்ள குப்பை கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் மளமளவென தீப்பற்றியதால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. குப்பையில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்ததால் நச்சுப் புகை வெளியேறி, சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சலால் அவதியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த அன்னூர் தீயணைப்புத் துறையினர், பல மணி நேரமாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குப்பை மேட்டின் உள்ளேயும் தீ எரிவதால், தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குப்பை கிடங்கை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-massive-fire-at-annur-garbage-dump-residents-suffer-due-to-thick-black-smoke




