சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 'விஸ்வநாத் & சன்ஸ்' டீம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தெலுங்கு நேர்காணல் ஒன்றில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா, வெங்கி அத்லூரி ஆகியோர் கலந்துகொண்டிருக்கின்றனர். அந்த நேர்காணலில் பேசிய சூர்யா, "என் நண்பர் குடும்பத்தில் ஒரு கல்யாணம். அவர்களது குடும்பம் மினிஸ்டர் ஒருவருக்கு நெருக்கம். என் நண்பர் மினிஸ்டருக்கு பத்திரிக்கை வைக்க செல்லும்போது நானும் அவனுடன் சென்றேன். அப்போது என் நண்பரிடம் அவர், 'இந்தப் பையன் யார்?' எனக் கேட்டார். அதற்கு அவன், 'சிவக்குமார் சார் பையன்' என்று சொல்ல அவர், 'ஓ சிவக்குமார் சார் பையனா? என்ன செய்கிறீர்கள்' என்று கேட்டார். அப்போதுதான் நான் நடிக்க ஆரம்பித்த சமயம். 'பார்ப்பதற்கு சிவகுமார் சார் மாதிரியே இருக்கிறீர்கள். அவர் செய்ததைத்தானே நீங்களும் செய்யப்போகிறீர்கள். அவரை மாதிரியே நடிப்பீர்கள். அவருடைய பாவனைகள் எல்லாம் அப்படியே உங்களுக்கும் இருக்கும். இன்னொரு தலைமுறையும் அப்படியே உருவாகிறது" என்ற தொனியில் அந்த மினிஸ்டர் சொன்னார். சூர்யா அந்தச் சமயத்தில் இருந்து நான் அப்பாவின் படங்களைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். அவரைப் போல் நடிப்பதையோ, அவர் செய்ததையோ நான் செய்ய விரும்பவில்லை. இந்தச் சம்பவம்தான் என்னைத் தூண்டியது. அதிலிருந்துதான் எனக்கான பாதையை நான் உருவாக்கிக்கொண்டேன்" என்று பேசியிருக்கிறார். "அவரது கதாபாத்திரங்கள் சினிமாவிற்கு வர நினைக்கும் இளம் பெண்களுக்கு."- மமிதா குறித்து சூர்யா முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/suriya-reveals-why-he-avoided-his-fathers-films




