ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026' அழகிப் போட்டியில், கேரளாவைச் சேர்ந்த மாணவி காசியா லிஸ் மெஜோ மகுடம் வென்று சாதனை படைத்துள்ளார். மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026' அழகிப் போட்டியில், நாடு முழுவதும் இருந்து 52 அழகிகள் கலந்து கொண்டனர். அந்தப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 19 வயது சட்டக்கல்லூரி மாணவியான காசியா லிஸ் மெஜோ வரலாற்று வெற்றியைப் பெற்று, நாட்டின் புதிய அழகியாக மகுடம் சூட்டப்பட்டார். மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வெல்லும் முதல் கேரளப் பெண் என்ற பெருமையை காசியா லிஸ் மெஜோ பெற்றுள்ளார். இவருக்கு கடந்த ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா வெற்றியாளரான ரியா சிங்கா மகுடத்தைச் சூட்டினார். பன்முகத் திறமையாளர் வெற்றி பெற்ற காசியா லிஸ் மெஜோ ஒரு சட்டக்கல்லூரி மாணவி மட்டுமல்லாமல், மாடலிங் துறையிலும் சிறந்து விளங்குபவர். கலைத்துறையிலும் ஆர்வம் கொண்ட இவர், 12 ஆண்டுகள் முறையாக பரதநாட்டியம் பயின்றவர். மேலும், ஒரு சிறந்த பாடகரான இவர், டிரம்ஸ் மற்றும் வயலின் போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதிலும் வல்லவர். மம்மூட்டி நடிப்பில் வெளியான 'ஷைலாக்' என்ற மலையாளத் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். சர்வதேச அரங்கில் இந்தியா காசியா லிஸ் மெஜோ ஏற்கனவே சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 'மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025' அழகிப் போட்டியில் பங்கேற்று முதல் ரன்னர்-அப் பட்டத்தை வென்றிருந்தார். தற்போது மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுள்ளதன் மூலம், அடுத்து நடைபெறவுள்ள சர்வதேச 'மிஸ் யுனிவர்ஸ்' போட்டியில் இந்திய நாட்டின் சார்பில் பங்கேற்கும் அதிகாரப்பூர்வ தகுதியைப் பெற்றுள்ளார். மற்ற வெற்றியாளர்கள் இந்த கடுமையான போட்டியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இதில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் முதல் ரன்னர்-அப் இடத்தையும், குஜராத்தைச் சேர்ந்த அனுஸ்ரீ சதாவ்லேகர் 2-வது ரன்னர்-அப் இடத்தையும் பிடித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/miss-universe-india-2026-kerala-student-kasiya-liz-mejo-achieves-a-milestone-by-winning-the-crown




