பாரிஸ், பிரான்சில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 100 கோடி மதிப்புள்ள ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன. 4 ஓவியங்கள் பிரான்ஸ் நாட்டின் 1841ம் ஆண்டு முதல் 1919ம் ஆண்டு வரை வாழ்ந்த புகழ்பெற்ற ஓவியர் பியர் அகஸ்ட் ரென்வார். இவர் வரைந்த உலகப்புகழ்பெற்ற 4 ஓவியங்கள் கார்க்னெஸ் சுர் மெர் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்த 4 ஓவியங்களின் மொத்த மதிப்பு 9 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய்) ஆகும். திருட்டு இந்நிலையில், அருங்காட்சியகத்தில் இருந்த 4 ஓவியங்களும் இன்று அதிகாலை திருடப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த 2 பேர் கொண்ட 4 ஓவியங்களையும் திருடியுள்ளனர். 2 ஓவியங்கள் மீட்பு இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று அருங்காட்சியகத்தை சுற்றி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, திருடப்பட்ட 4 ஓவியங்களில் 2 ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் உள்ள தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய 2 ஓவியங்களை திருடர்கள் எடுத்து சென்றுள்ளனர். இதையடுத்து, திருடப்பட்ட 2 ஓவியங்களையும், அதை திருடிச்சென்ற இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/france-rs-100-crore-worth-paintings-stolen




