புதுடெல்லி, தற்போது யூரியா இறக்குமதி செலவு 57 சதவீதம் குறைந்துள்ளதால், மத்திய அரசுக்கு உர மானிய சுமை குறையும் என மத்திய உர அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யூரியா இறக்குமதி செலவு 57 சதவீதம் குறைந்தது சர்வதேச சந்தையில் விலை குறைந்ததை அடுத்து யூரியா இறக்குமதி செலவு, கடந்த மே மாத உச்சத்திலிருந்து 57 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய உர அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: சர்வதேச யூரியா விலை 23 சதவீதம் குறைந்தது கடந்த மே மாதம் டன்னுக்கு 89 ஆயிரத்து 965 ரூபாயாக இருந்த யூரியா இறக்குமதி செலவு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 38 ஆயிரத்து 575 ரூபாயாக குறைந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடும்போது சர்வதேச யூரியா விலை 23 சதவீதம் குறைந்துள்ளது. உர மானிய செலவு மறுமதிப்பீடு மேற்காசிய போர் காரணமாக உரங்களின் சர்வதேச விலை உயர்ந்ததால், உர மானியத்துக்கான பட்ஜெட் மதிப்பீடு அதிகரிக்கப்பட்டது. தற்போது உர விலை தொடர்ந்து குறைந்து வருவதால், மத்திய அரசு உர மானிய செலவை மறுமதிப்பீடு செய்து வருகிறது. மத்திய அரசுக்கு மானிய செலவு குறையும் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் உர வினியோகத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பால் மத்திய அரசுக்கு மானிய செலவு ரூ.3 லட்சம் கோடி உயரக்கூடும் என மதிப்பீடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது சர்வதேச உரங்கள் விலை குறைந்துள்ளதால், மத்திய அரசுக்கு மானிய செலவு குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/urea-import-cost-drops-by-57-percent-fertilizer-subsidy-burden-on-the-central-government-will-decrease




