ஹராரே, ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. ஜிம்பாப்வே - ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹராரேவில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா 294 ரன்கள் அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 294 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மெட் ரென்சவ் அதிகபட்சமாக 109 ரன்கள் குவித்தார். சிறப்பாக பந்து வீசிய ஜிம்பாப்வே வீரர் நியூமென் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியா வெற்றி இதையடுத்து 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே 45.1 ஓவரில் 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஜிம்பாப்வேயை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் அந்த அணியின் எர்வின் அதிகபட்சமாக 59 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அந்த அணியின் எல்லிஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/first-odi-australia-crush-zimbabwe




