மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் FQL என்கிற ஆப்பில் முதலீடு செய்தால் 40 நாட்களில் இரட்டிப்பான லாபம் கிடைக்கும் எனப் பொதுமக்களை நம்ப வைத்து சுமார் 1000 கோடிக்கு அதிகமான பணம் முறைகேடு செய்துள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் தனி முகாம் நடத்தி பாதிக்கபட்டவர்களிடம் புகார் மனுக்களைப் பெற்று வருகிறது காவல்துறை. தற்போது 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லட்சகணக்கில் பணத்தை இழந்தாகப் புகாரளித்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய நபர்களான ரஞ்சித், அருண் ஆகியோர் தலைமறைவான நிலையில் 20 ஏஜெண்டுகள் மீது வழக்குப் பதிவு செய்யபட்டு கைது செய்யபட்டுள்ளனர். மேலும், 13 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இந்த மோசடி தொடர்பான வழக்குகள் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராசுவின் உடலை மீட்டு கொண்டு செல்லும் ஊர்மக்கள் இந்நிலையில், காசம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராசு என்பவரும் இந்த நிறுவனத்தில் ஏஜெண்டாகச் செயல்பட்டு வந்துள்ளார். இவரை நம்பி காசம்பட்டி பகுதியைச் சேர்ந்த பலரும் FQL-ல் பணத்தை முதலீடு செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது மேலும் ராசுவும் இதில் முதலீடு செய்துள்ளதாகவும் ஏமாந்ததோடு இவரை நம்பி பணத்தை முதலீடு செய்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்த ராசு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சாலை மறியலில் ஈடுபட்டம் மக்கள் இந்நிலையில் ராசுவின் உடலுடன் அப்பகுதி மக்கள் திண்டுக்கல் - மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தச் சாலையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையறிந்து வந்து காவல்துறையினர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட்டத்தைக் கலைக்க முடியவில்லை என்பதால் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். மதுரை: 'இரட்டிப்பு லாபம் பெறலாம்' - 'சதுரங்க வேட்டை' பட பாணியில் ஏமாற்றும் Bitcoin மோசடி கும்பல் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/fql-investment-scam-youth-commits-suicide-near-natham-relatives-stage-road-blockade




