சென்னை, புரட்டாசி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கடுமையான சரிவை சந்தித்தது. இதனால் அசைவம் சாப்பிடும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தங்களுக்கு தேவையான மீன்களை அள்ளி சென்றனர். வழக்கமான கூட்டம் இல்லை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் அசைவ விருப்பங்களில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு. இங்கு கிடைக்கும் மீன்கள் அதிக சுவையுடன் இருக்கும் என்பதால், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பம் குடும்பமாக வந்து மக்கள் மீன்களை வாங்கி செல்வது வழக்கம். ஆனால், தற்போது புரட்டாசி மாதம் என்பதால், பெரும்பாலான பொதுமக்கள் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக, இன்று காசிமேடு சந்தையில் வழக்கமான அசைவ பிரியர்களின் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. மீன்கள் வரத்து அதிகரிப்பு அதே நேரத்தில், இன்று ஏராளமான விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடித்துவிட்டு கரை திரும்பின. சிறிய வகை மீன்கள் வழக்கத்தை விட மிக ஏராளமாக கிடைத்தன. ஒருபுறம் மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததாலும், மறுபுறம் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்ததாலும், காசிமேட்டில் மீன்களின் விலை கிடுகிடுவெனக் குறைந்தது. விலை நிலவரம் இன்றைய சந்தையில் விற்கப்பட்ட முக்கிய மீன்களின் விலை நிலவரம் வருமாறு:- வஞ்சிரம் மீன்: கிலோ ரூபாய் 700 வவ்வால் மீன்: கிலோ ரூபாய் 250 சங்கரா மீன்: கிலோ ரூபாய் 200 படகு உரிமையாளர்கள் கவலை விலை மிகவும் குறைவாக இருந்ததால், வந்திருந்த ஒரு சில பொதுமக்கள் தங்களது தேவைக்கு அதிகமாகவே மீன்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். மேலும், அயிலை, வாழை, தளிசை, முழியான் போன்ற மீன்கள் போதிய விலைக்கு போகாததால், அவற்றை மீன் ஆயில் (நெய்) எடுப்பதற்காக மொத்த வியாபாரிகள் மிக குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று வியாபாரிகள் ஓரளவிற்கு வந்திருந்த போதிலும், தங்களுக்கு போதிய லாபகரமான விலை கிடைக்கவில்லை எனப் படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-fish-arrivals-prices-drop-kasimedu-market




