ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸ்க்கு நல்ல வரவேற்பும், பாராட்டுங்களும் கிடைத்திருக்கின்றன. போஸ் வெங்கட், காயத்ரி, நிகிலா சங்கர், ராஜ் ஐயப்பா ஆகியோர் நடிக்கும் இந்த சீரிஸை இயக்குநர் சிதம்பரம் இயக்குகிறார். 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸுக்காக, அதன் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று ராஜ் ஐயப்பாவை பேட்டி கண்டோம். Brothers & Sisters Series நம்மிடையே பேசியவர், "'உப்பு புளி காரம்' சீரிஸுக்கு மக்கள்கிட்ட இருந்து நல்ல வரவேற்பு கிடைச்சிருந்தது. இப்போ 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' தொடரோட மேஜிக் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். கதை இப்போதான் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்துட்டு இருக்கு. இன்னும் போகப் போகக் கதை சூடுபிடிக்கும். இப்போதைக்குக் கிடைத்திருக்கிற ரிப்போர்ட்ஸ் எல்லாமே ரொம்ப நல்லா இருக்குன்னு இயக்குநர் சிதம்பரம் சாரும் சொன்னாரு. உண்மையைச் சொல்லணும்னா, நான் இந்த ஷோவை பெருசா பார்க்குறதில்லை. சோசியல் மீடியாவுல என் புரொமோஸை ஷேர் பண்ணுவேனே தவிர, அதுக்கு வர்ற கமெண்ட்டுகளைக்கூடப் போய் படிக்க மாட்டேன். சிதம்பரம் சார்தான் 'இப்படித் திட்டுறாங்க, அப்படிப் பேசுறாங்க'ன்னு என்கிட்ட சொல்லுவாரு. நான் டப்பிங் பேசும்போதுதான் காட்சிகளைப் பார்ப்பேன். அதுவே எனக்குப் போதுமானதா இருக்கு. எப்போதாவது ஃபேமிலியோட சேர்ந்து பார்க்க வாய்ப்பு கிடைச்சா மட்டும் பார்ப்பேன். இயக்குநர் சிதம்பரம் சார் எனக்கு ஒரு மூத்த சகோதரரைப் போன்றவர். அவர்கிட்ட இருந்து சினிமா, வாழ்க்கைன்னு நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டிருக்கேன்" என்றார். Brothers & Sisters - Raj Ayappa 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸில் தன்னுடைய தந்தை, தங்கையுடன் இணைந்து நடிப்பது பற்றிப் பகிர்ந்துகொண்டவர், "குடும்பத்தோட இணைந்து நடிக்கிறது ரொம்பவே ஸ்பெஷலான ஒரு அனுபவம். இதோட அருமை இப்போ உடனே தெரியலைனாலும், இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு யோசிச்சுப் பார்க்கும்போது கண்டிப்பா ரொம்ப பெருமையா இருக்கும். ஏன்னா, குடும்பத்தோட சேர்ந்து ஒரே கதையில நடிக்கிற வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் அமையாது. வீட்டுக்கு வந்துட்டா நான் வொர்க் பத்திப் பெருசா யார்கிட்டயும் பேச மாட்டேன். அம்மாகிட்ட மட்டும் சில விஷயங்களைப் பகிர்ந்திப்பேன். மத்தபடி, வேலை விஷயங்களைப் பெருசா பேசமாட்டோம். அப்பா என் நடிப்பைப் பார்த்துட்டு, 'நீ பண்றது உனக்கு ஓகேவா இருக்கலாம். ஆனா கேமராவுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலா நடிக்கணும்'னு அட்வைஸ் பண்ணுவாரு. இன்னும் நிறைய பண்ணணும்ங்கிறதைதான் அவர் அப்படிச் சொல்லுவாரு" எனப் பகிர்ந்துகொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/raj-ayyappa-interview-brothers-and-sisters-serial-jiohotstar




