சட்டமன்றத்தில் முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். உதயநிதி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ``காவல்துறையின் கொள்கை விளக்கப் புத்தகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். கொலை, கலவரம்,வழிப்பறி, பாலியல் குற்றங்கள் எல்லாம் குறைந்திருப்பதாக தரவுகளோடு கூறியிருக்கிறார்கள். எங்களுடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்ததாக நேர்மையாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி. இந்த அரசு அமைந்து 116 நாட்கள் ஆகிறது. இத்தனை நாட்களில் இந்த அரசு புதிதாக கொண்டு வந்த திட்டங்களை விட பெயர் மாற்ற அறிவிப்புகள்தான் அதிகம் வருகிறது. இல்லையெனில், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்கிறீர்கள். பரந்தூர் விமான நிலையம், மாமல்லன் கால்வாய் என இதற்கு உதாரணமாக நிறைய விஷயங்களை குறிப்பிடலாம். விவசாயக்கடன் முழு தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர், பெண்களுக்கு எல்லா பேருந்துகளிலும் இலவசம் என்றீர்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் பாதிப் பாதியாக நிறைவேற்ற அறிவிப்பு மட்டுமே வெளியிட்டிருக்கிறீர்கள். இதைதயெல்லாம் பார்க்கையில் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் போல தாய்மாமன் காது குத்தும் திட்டம் என அறிவித்திருக்கலாம். உதயநிதி பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் நாங்கள் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தோம். உதாரணமாக வேலூரில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் 32 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். உங்களின் 116 நாள் ஆட்சி பெண்களுக்கு பெரும் துயரை கொடுத்துவிட்டது. கோவை மாவட்டத்தில் மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் 9 கொலைகள் நடந்திருக்கிறது. இந்த ஆட்சி வந்த பிறகு 10 ஆணவக்கொலைகள் நடந்திருக்கிறது. கறிக்கடையில் கூட இவ்வளவு வெட்டுக்குத்து நடப்பதில்லை.' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/tn-assembly-udhayanidhi-slams-government-says-even-meat-shops-dont-see-this-much-cutting



