திருவள்ளூர், திருவள்ளூர் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு தீர்த்தீஸ்வர கோவிலில், பவித்ர உற்சவம் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. உற்சவ நாட்களில் தினமும் காலை 8 மணிக்கு, மாலை 5:00 மணிக்கு தீர்த்தீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. யாகசாலையில், இரு வேளைகளிலும், மண்டப பூஜை, வேதிகார்ச்சனம், மண்டல ஆராதனம், யாக வேள்வியைத் தொடர்ந்து நேற்று பவித்ர சமர்ப்பணம் நடைபெற்றது. நாளை இரவு 9:00 மணிக்கு மேல், பவித்ர உற்சவம் நிறைவு பூஜை மற்றும் பூர்ணாஹுதி நடைபெறும். கோவிலில் தினமும் நடைபெறும் பூஜைகளில் ஏதேனும் குறைகள் இருந்து அதனால் ஏற்பட்ட தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காக, ஆண்டுதோறும் பவித்ர உற்சவம் 5 நாட்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/pavithrotsavam-at-thiruvallur-theertheeswara-swamy-temple




