செயின்ட் லூசியா, கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. செயின்ட் லூசியா - அன்டிகுவா மோதல் இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் - அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அன்டிகுவா 19 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. செயிண்ட் லூசியா 8 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. செயின்ட் லூசியா வெற்றி இதனையடுத்து களமிறங்கிய செயின்ட் லூசியா 7.4 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்சை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி செயின்ட் லூசியா கிங்ஸ் அபார வெற்றிபெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-lucia-kings-defeat-antigua




