சென்னை, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி, ஒப்புதல் வழங்கியுள்ள பாரதப் பிரதமர் நரேந்திரன் மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு நயினார் நாகேந்திரன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். நெஞ்சார்ந்த நன்றிகள் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வரும் 2027-28 சந்தைப்படுத்துதல் பருவத்திற்கான, குறிப்பிட்ட சம்பா பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி, ஒப்புதல் வழங்கியுள்ள பாரதப் பிரதமர் நரேந்திரன் மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன். ஆதரவு விலை உயர்வு குங்குமப்பூ குவிண்டாலுக்கு ரூ. 675, கடுகு குவிண்டாலுக்கு ரூ. 413, மசூர் பயறு குவிண்டாலுக்கு ரூ. 390, பார்லி குவிண்டாலுக்கு ரூ. 136, கொண்டைக்கடலை குவிண்டாலுக்கு ரூ. 83, கோதுமை குவிண்டாலுக்கு ரூ. 25 என உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலம், விவசாயிகளின் உழைப்பும் வாழ்வாதாரமும் காக்கப்படும்! தற்போதைய பருவநிலை மாற்றத்தின் காரணமாக, முறையான சாகுபடி செய்ய முடியாமலும் விளைவித்த பயிர்களை சந்தைப்படுத்த முடியாமலும் திணறி வரும் விவசாயிகளுக்கு, இந்த அறிவிப்பு மிகப்பெரும் ஊக்கமாக அமையும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/hike-in-minimum-support-price-for-samba-crops-nainar-nagendran-expresses-gratitude




