சென்னை, இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க மொத்தம் 25,000-க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கிராம அஞ்சல் பணியாளர்கள், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் / கிளை போஸ்ட் பணிகள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் விண்ணப்பிக்க முடியும். தேர்வு எதுவும் கிடையாது. இந்த பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு: பணி நிறுவனம்: தமிழ்நாடு அஞ்சல் துறை காலி பணியிடங்கள்: 2,095 பதவி: கிராமின் தாக் சேவக் (ஜி.டி.எஸ்.) கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி. 10-ம்வகுப்பு வரை உள்ளூர் மொழியை படித்திருக்க வேண்டும். கணினி மற்றும் சைக்கிள் ஓட்டும் திறனும் அவசியம். வயது: 21-9-2026 அன்றைய தேதிப்படி 18 முதல் 40 வயது வரை தேர்வு முறை: மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி பட்டியல் (மெரிட் லிஸ்ட்), சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்ப நடைமுறை: 31-8-2026 முதல் 19-9-2026 வரை விண்ணப்பிக்கலாம். 23-9-2026 முதல் 24-9-2026 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். முழு விவரங்களுக்கு: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/education-and-employment/jobs-in-the-postal-department-2095-vacancies-in-tamil-nadu-candidates-who-have-completed-class-10-can-apply




