இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதிக்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று (செப்.5) நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய தொகுதி எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத், தொகுதி மேம்பாட்டு நிதி சரியாகப் பயன்படுத்தப்படாதது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கடுமையாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார். கங்கனா ரனாவத் இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இக்கூட்டத்தில் பேசிய கங்கனா ரனாவத், "எனது தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 90 சதவீத நிதியைச் செலவிட்டுவிட்டதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். ஆனால், கள நிலவரப்படி வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கணக்கு அறிக்கைகளுக்கும் உண்மையான செலவினங்களுக்கும் பெரிய அளவில் முரண்பாடு உள்ளது. "11 करोड़ दिए हैं और काम एक भी नहीं हुआ। इतनी निठल्ली है, इतनी निकृष्ट है। क्या बोलूं मैं वहां पर मीडिया के सामने" "इतना ज्यादा निगेटिव प्रचार हो रहा है, लोग रील बना रहे हैं" कंगना रनौत मंडी में अधिकारियों पर भड़कीं। वह सांसद निधि का पैसा खर्च नहीं होने से नाराज थीं — Sachin Gupta (@Sachingupta) September 5, 2026 இதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் முறையான விளக்கம் அளித்தாக வேண்டும். மேலும், இந்த நிதியில் 30 முதல் 40 சதவீதம் வரை முறைகேடு செய்த நபர்களுக்குச் சென்றடைந்துள்ளதாகச் சில புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. அந்தப் பணத்தைக் கூட அதிகாரிகளால் மீட்க முடியவில்லை. மண்டி தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடப்பது குறித்து தேசிய ஊடகங்கள் என்னை விமர்சித்து வருகின்றன. கங்கனா ரனாவத் நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தினமும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களைப் பதிவிட்டு கேள்வி கேட்கின்றனர். இனிமேலும் தாமதிக்காமல் நிலுவையில் உள்ள அனைத்துத் திட்டப் பணிகளையும் விரைந்து முடிப்பதுடன், மக்கள் பணத்தை நேர்மையாகப் பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எச்சரித்திருக்கிறார். Kriti Sanon Bikini Ad Controversy: "அவரை யார் தடுத்தது?" - மீண்டும் கிருத்தி சனோனுக்கு கங்கனா பதில்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/mp-constituency-development-fund-kangana-ranaut-grills-officials-with-a-barrage-of-questions




