மணீசா துருக்கியில் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம் அடைந்தனர். துருக்கியின் மேற்கே மணீசா மாகாணத்தில் ஒரு மாணவர் கையில் துப்பாக்கியுடன் சென்று பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். இதில் 11 மாணவர்கள் காயம் அடைந்தனர். சம்பவம் அறிந்து பெரிய கூட்டம் கூடி விட்டது. வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. உடனடியாக அவசரகால எண்ணுக்கு தகவல் சென்று, போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் விரைவாக சென்றனர். அவர்கள், 11 பேரையும் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். நீதி மந்திரி இதுதொடர்பாக துருக்கி நீதி மந்திரி அகின் குர்லன் கூறும்போது, துப்பாக்கி சூடு நடத்திய மாணவர், பெற்றோர் மற்றும் தாத்தா ஆகியோர் கைது செய்யப்பட்டு விட்டனர் என கூறினார். துருக்கியில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதற்கு முன்பு, நடப்பு ஆண்டில் 9 மாணவர்கள், ஆசிரியர் ஒருவரை, 14 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று செய்து விட்டு அவனும் தற்கொலை செய்து கொண்டான். மற்றொரு சம்பவத்தில், சன்லியுர்பா பகுதியில் முன்னாள் மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 16 பேர் காயமடைந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/turkey-school-shooting-11-students-injured




