சென்னை, தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ் நெல் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை குறித்து முதல்-அமைச்சர் விஜய் கூறியதாவது; ஊக்கத்தொகை விவசாயிகளில் நலனை பாதுகாக்கும் நோக்கில் நெல், கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு செய்து உள்ளோம். சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.289, பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூ.150ம் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,750, பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600 கிடைக்கும். சர்க்கரை ஆலைகளில் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.3290.50வழங்குகிறது. அத்துடன் கரும்புக்கான ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.709.50 தமிழக அரசு சார்பில் வழங்கப்படும். இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4,000 விலையாக கிடைக்கும். வரலாற்றிலேயே முதல் முறை நெல்லுக்கு ரூ.150 வரை உயர்த்தப்பட்டுள்ளது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. அதேபோல, கரும்பு டன் 134க்கு மேல் வழங்குவதும் இதுதான் முதல் முறையாகும். நமது அரசு விவசாயிகளை விட்டுவிடாமல் தோளோடு தோல் கொடுத்து, விவசாயிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/incentive-for-paddy-sugarcane-purchase-hike-chief-minister-vijays-announcement-in-the-assembly




