சூரத் உத்தர பிரதேச கவர்னர் பயணித்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து குஜராத்தின் ஆமதாபாத் நகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அப்போது, அதன் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கற்கள் வீசப்பட்டன. இதனால், பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. ஒருவர் கைது இதுபற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, சூரத் அருகே உத்ரான் மற்றும் கொசாத் நிலையங்களுக்கு இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது, மாலை 6.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்தனர். இதில், ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடியில் கீறல்கள் ஏற்பட்டன. எனினும், இதனால் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. கவர்னர் பயணம் இதனை தொடர்ந்து, ரெயில்வே அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் அதிரடி விரைவு படை, போலீசார் உள்ளிட்டோர் சம்பவ பகுதிக்கு சென்று முதல்கட்ட விசாரணை நடத்தினர். இதில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் நடந்தபோது, வேறொரு பெட்டியில், உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல் பயணித்துள்ளார். இதனால் அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/governor-travelled-vande-bharat-express-train-stone-pelting-one-arrested



