சென்னை, தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். அதன்படி, இந்த ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. எனவே, தமிழக தேர்தலை காரணம் காட்டி 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஒப்பந்தம் கடந்த 30-ந்தேதி முடிவடைந்தது. தமிழக அரசு அதனை நீட்டிக்கவோ, புதுப்பிக்கவோ செய்யவில்லை. இதனால் அனைத்து பார்களையும் மூடவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 2-ந் தேதி முதல் பார்கள் மூடப்பட்டன. இதற்கிடையில், பார் உரிமையாளர்கள் ஒப்பந்தத்தை நீட்டித்து தர வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பதற்கான உயர்நிலை கூட்டம் அமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்தது. அதில் பார் ஒப்பந்தத்தை 2 மாதங்களுக்கு நீட்டிப்பது, அந்த காலத்திற்குள் புதிய டெண்டர் விடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை உறுதி செய்துள்ள பார் உரிமையாளர்கள் சங்கத்தினர், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பார்கள் திறக்கப்படும் என்று கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/contract-extended-by-2-months-tasmac-bars-reopen-today




