அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது குடும்பத்தின் கிரிப்டோகரன்சி தொழில்கள் மூலம் மட்டும் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் டாலரை சம்பாதித்துள்ளார். அது குறித்து நேற்று (ஜூலை 1, 2026), ட்ரம்பிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவரது விளக்கம்... "என்னுடைய தனிப்பட்ட நிதி விவகாரங்களில் நான் நேரடியாகத் தலையிடுவதில்லை. என் பணத்தை நிர்வகிப்பதற்கென்றே சில பிரத்யேக நிதி நிறுவனங்கள் உள்ளன. கிரிப்டோ கரன்சி மேகதாது பிரச்னை: ஏன் புதிய நடுவர் மன்றம் வேண்டாம்? - அமைத்தால் என்ன பிரச்னை? | ஓர் அலசல் நான் அதிபராவதற்கு முன்பே பெருமளவில் பணம் ஈட்டியவன். அவர்கள் என் பணத்தை வெவ்வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். நான் அவர்களுடன் பேசுவதே இல்லை. ஒருபோதும் தொடர்புகொள்வது கிடையாது. என்னிடம் பல பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். 'மூடப்பட்ட கணக்குகள்' (Blind Trust) என்று சொல்வார்களே, அதுபோன்ற ஒரு அமைப்பில் நாம் பணத்தைச் செலுத்திவிட்டால் அதோடு சரி, அதன்பின் நாம் அவர்களுடன் விவாதிக்க முடியாது. அவை பெரிய நிறுவனங்கள், அவர்கள்தான் அதை முழுமையாக நடத்துகிறார்கள். எவ்வாறாயினும், வணிகத் துறையில் எனக்கு மிகச்சிறந்ததொரு தொழில் வாழ்க்கை அமைந்திருந்தது என்பதை நான் மறுக்க முடியாது. நான் ஏன் இப்போது லாபம் ஈட்டுகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில், இப்போது பங்குச்சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் இங்கு எல்லாரும் தான் லாபம் சம்பாதிக்கிறார்கள். உங்களிடம் ஒரு '401k' (அமெரிக்க ஓய்வூதியத் திட்டம்) கணக்கு இருந்தால், அதன் தற்போதைய நிலையைச் சற்றே கவனித்துப் பாருங்கள். அது கிட்டத்தட்ட 85 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ட்ரம்ப்பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே மோதல்: 'Open War' ஆக மாறுமா? என்ன பிரச்னை? |Full Summary அதற்காக நீங்கள் அதிபர் ட்ரம்பிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். எனவே, இங்கு நாம் அனைவரும் தான் லாபமடைகிறோம். என்னிடம் பெருமளவிலான பணமும் ரொக்கமும் இருப்பதால், அதை நான் பெரிய நிதி நிறுவனங்களிடம் கொடுத்துள்ளேன். அதன் மூலம் எனக்கும் லாபம் கிடைக்கிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரிகிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் பரவலான பல துறைகளில் என் பணத்தை முதலீடு செய்கிறார்கள்." முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/trump-defends-12-billion-crypto-earnings-amid-conflict-questions




