‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்தின் மீதான இடைக்காலத் தடையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. ‘டிமான்ட்டி காலனி’ அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கிய ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதனை தொடர்ந்து தற்போது ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் 3-ம் பாகம் உருவாகியுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக 3 ஆம் பாகத்தின் வெளியீட்டுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ‘ஏ’ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தை திரில்லர் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமத்தை ஜீ5 நிறுவனம் ரூ. 50 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை ‘டிமான்ட்டி காலனி 3’ படம் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், இப்படத்தின் இணை தயாரிப்பாளர் விஜயா சுப்பிரமணியன் (வொயிட் நைட் எண்டர்டெயின்மென்ட்) தன் கவனத்திற்கு வராமலேயே இப்படத்தின் ஓடிடி உரிமத்தைக் கொடுத்ததாகவும் தங்களுக்குத் தெரியாமலே படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் கூறி சென்னை ஐகோர்ட்டில் ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை உத்தரவை பெற்றார். இடைக்காலத் தடையை ரத்து செய்த நீதிமன்றம் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்தின் மீதான இடைக்காலத் தடையை ரத்து செய்வதாக சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஏ’ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இந்த திரில்லர் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். The darkness is back. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/chennai-high-court-cancelled-the-stay-order-for-the-demonte-colony-3-film



