சென்னை, தமிழக சட்டசபையில் இம்மாத இறுதியில், 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுக் கூட்டம் இந்த நிலையில், பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து, ஒவ்வொரு துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் எஸ்.கீர்த்தனா, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ.மரிய வில்சன், தலைமை செயலாளர் மு.சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமை செயலாளர் ச.விஜயகுமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மு.அ.சித்திக் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-study-meeting-on-business-and-investment-promotion-was-held-under-the-chairmanship-of-chief-minister-vijay




