பெரு பெரு நாட்டில் சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்தில் சிக்கியதில் 13 பேர் பலியானார்கள். பெரு நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்கள் நிறைய உள்ளன. இதனை காண்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாவாசிகள் செல்வார்கள். நாஸ்கா லைன்ஸ் இந்த நிலையில், பிஸ்கோ என்ற பகுதியில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு, தொல்லியல் ஆய்வுக்கு உட்பட்ட நாஸ்கா லைன்ஸ் என்ற பகுதிக்கு சென்றது. அதில், 11 பயணிகள் மற்றும் 2 விமானிகள் இருந்தனர். இந்நிலையில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது. இதில், விமானம் தீப்பற்றி கொண்டு எரிந்தது. இதனால், மீட்பு பணியை உடனடியாக மேற்கொள்வது என்பது சாத்தியமற்று காணப்பட்டது. ஆய்வு பணி இந்த விபத்தில் சிக்கி 13 பேர் பலியானார்கள் என காவல் துறை உயரதிகாரி ஜார்ஜ் ஆண்டிரேட் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க நாஸ்கா லைன்ஸ் பற்றி ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக சென்றுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/peru-tourist-plane-crash-kills-13




