தலைமைச் செயலகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தின் அறை வாசற் கதவின் மேல் கடந்த சில நாள்களாக ஒரு சிவப்புத்துணி தொங்கிக் கொண்டிருக்கிறது. எதற்காக அந்த துணி வாயிற் கதவில் மாட்டப்பட்டிருக்கிறது என அமைச்சரின் அறைக்கு வரும் மக்கள் குழப்பமடைந்து வருகின்றனர். அந்த சிவப்புத் துணியின் ரகசியம் என்ன? ஆனந்த் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான ஜூனியர் விகடன் இதழில் கைகுலுக்கும் திமுக - அதிமுக உறுப்பினர்கள்.மந்திரி அறையில் மந்தரித்த துணி - சட்டமன்ற வளாக கலகலப்புகள்' என ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். அதில் மந்திரியின் அறையில் தொங்கும் அந்த சிவப்புத் துணி பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். இதழ் வெளியான நிலையில் அமைச்சரின் அறையில் தொங்கும் அந்த சிவப்புத் துணி புகைப்படமாகவும் வீடியோவாகவும் இணையத்தில் பரவி வருகிறது. அமைச்சரின் அறையில் திடீரென தொங்கும் அந்த சிவப்புத்துணியை பற்றி அமைச்சருக்கு நெருக்கமான கோட்டை வட்டாரத்தினர் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். ``அமைச்சர் ஆனந்துக்கு கடவுள் பக்தி அதிகம். எந்தவொரு முக்கியமான காரியத்தை செய்வதற்கு முன்பும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு போய் வணங்கிவிட்டுதான் வேலையை தொடங்குவார். சிவப்புத் துணி அந்த கோயில்தான் அவருக்கு மனதுக்கு நெருக்கமான இடம். தவெகவின் வேட்பாளர் பட்டியலையும்கூட அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்துவிட்டுதான் தலைவரிடமே கொடுத்தார். சமீபமாக அமைச்சரின் நீர்வளத்துறை சார்ந்த பிரச்னைகள் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காவிரி, மேகதாது என உள்ளூர் எதிர்க்கட்சி தொடங்கி பக்கத்து மாநில ஆளுங்கட்சி வரை விமர்சிக்கிறார்கள். அவையிலும் அமைச்சரின் துறையை எதிர்க்கட்சியினர் அடித்து வெளுக்கின்றனர். இந்த சிக்கல்களெல்லாம் தீர வேண்டும் என்பதற்காக அவரின் இஷ்ட கோயிலில் வேண்டி சிறப்பு பூஜை செய்து சிவப்புத் துணியை வாங்கி வந்து மாட்டியிருப்பார்" என கிசுகிசுக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/red-cloth-hanging-in-minister-anand-room-whats-the-story-behind-it




