செங்கல்பட்டு, தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சரத்குமார், தனது தொகுதியில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், எங்கள் தலைவர் எனக்கு அமைச்சர் பதவியை கொடுத்திருந்தாலும் தாம்பரம் மாநகராட்சியில் எனது தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்யவே முடியவில்லை. அதிகாரிகளை கவுன்சிலர்கள் வேலை செய்யவிடாமல் தடுக்கின்றனர். த.வெ.க.வினர் சென்று நியாயம் கேட்டால் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினராக இருந்து எனது பணிகளை செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழ இருப்பவர்கள் அந்த பணிகளை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, மாநகராட்சி தேர்தல் வரும்போது அவர்களுக்கு நீங்கள் பாடம் கற்பிக்க வேண்டும். எல்லாமே உங்க கையில் மட்டும்தான் இருக்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/councilors-do-not-let-officials-do-their-work-a-lesson-must-be-taught-in-the-municipal-corporation-elections-minister-sarathkumar




