ராமநாதபுரம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகள் மற்றும் உடைமைகளை சேதப்படுத்துவதுமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்து, அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். அந்த மீனவர்கள் எல்லை தாண்டி சென்றதாக கூறப்படும் நிலையில், அவர்களிடம் இலங்கை கடற்படையினர் நடத்திய விசாரணையில், தங்களின் படகு சேதமடைந்ததால் எல்லை தாண்டி வந்தோம் என்று அவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு அழைத்துச் சென்று அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/sri-lankan-navy-arrests-8-tamil-nadu-fishermen-near-katchatheevu




