நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் அவரை வைத்தே இயக்கிய 'ராட்சசன்' திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தார். ராம் குமார் இயக்கத்தில் 3-வது முறையாக விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘இரண்டு வானம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் தென் இந்திய திரையுலகில் மளமளவென முன்னேறி வரும் மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கொடைக்கானலில் 150 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் நிறைவடைந்து. தற்போது படத்தின் வெளியீட்டிற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை கோடை காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ‘இரண்டு வானம்’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு விஷ்ணு விஷாலை வாழ்த்தியுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. Two skies. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/vishnu-vishals-birthday-irandu-vaanam-film-team-wishes-him-with-a-special-poster




